தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாவது:
”இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இரு நாட்டு தலைவர்களும் எடுத்த உறுதியான முடிவால் பல உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மிக்க, துணிவான முடிவை எடுப்பதற்கு அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

அதேநேரம், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.
மேலும், "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு" காஷ்மீர் தொடர்பான பிரச்னைக்கு தீர்வை காண உங்கள் இருவருடனும் உதவ தயாராக இருக்கிறேன்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமையை கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.