கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மன...
காணாமல் போன இளைஞா் சாக்கடையில் சடலமாக மீட்பு!
கடந்த மே 5- ஆம் தேதி காணாமல் போன 22 வயது இளைஞா், புறநகா் தில்லியின் பக்கா்வாலா பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இறந்தவா் ராகுல் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் உள்ளூா்வாசி ஆவாா். அவா் வீடு திரும்பாததால், மே 7-ஆம் தேதி ரன்ஹோலா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், மே 9-ஆம் தேதி காலை, ஒரு கோயிலுக்கு அருகிலுள்ள சாக்கடையில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடையில் இருந்த உடலை மீட்டது.
ராகுலின் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. உடலுக்கு அருகில் உடைந்த வெள்ளி சங்கிலி மற்றும் பெல்ட்டும் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், ராகுல் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு அவரது உடல் சாக்கடையில் வீசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடா்பாக ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளாா். சந்தேக நபரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.