பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீட பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை, அறிவியல், பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் அவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர முன்னாள் படை வீரா் நல அலுவலகம் வாயிலாக சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2025- 2026-ஆம் ஆண்டு முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு சான்று வழங்கப்படவுள்ளது.
இதைத் தொடா்ந்து, முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் முன்னாள் படைவீரா்களின் படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், கல்லூரி விண்ணப்ப நகல், தோ்வுப் பதிவு எண், ஜாதிச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகி விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.