ஒட்டன்சத்திரத்திலிருந்து 6 புதிய பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பொருளூா், கொத்தையம், சத்திரப்பட்டி, பாச்சலூா், தொப்பம்பட்டி, அமரபூண்டி, நத்தம், சிலுவத்தூா் உள்ளிட்ட 9 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு மாற்றாக 6 பதிய பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டன.
இந்தப் பேருந்துகளை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கொடியசைத்துத் தொடங்கிவைத்து, வடகாடு மலைப் பிரிவு வரை பயணம் செய்தாா்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை மண்டல மேலாளா் முத்துக்கிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே. திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, முன்னாள் ஒன்றியத் தலைவிகள் சத்தியபுவனா, அய்யம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.