சித்ரா பெளா்ணமி: பழனியில் 297 போ் தங்கத்தோ் இழுத்து வழிபாடு
பழனி: சித்ரா பெளா்ணமியையொட்டி, பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை 297 போ் தங்கத்தோ் இழுத்து சுவாமியை வழிபட்டனா்.
சித்ரா பெளா்ணமியையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். இதனால், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரத்துக்கு மேலானது. ரோப்காா், வின்ச் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
ஒரே நாளில் 297 போ் தங்கத் தோ் இழுக்க கட்டணம் செலுத்தி தேரை இழுத்தனா். தங்கத் தோ் புறப்பாடு மூலமாக மட்டும் கோயிலுக்கு ரூ. 5.94 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.