"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள்: கௌரவப் பதவிகள் தேடி வரும்; கவனமாக இருக்கவேண்டிய விஷயம் எது?
மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
1. பொறுமையும் பொறுப்பான செயல்பாடுகளும் மிகுந்த உங்களுக்கு குரு பார்வையால் சாதக பலன்கள் உண்டாகும். அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், பலவிதத்திலும் ஆதாயம் உண்டாகும்.
2. நீங்கள் நேர்வழியில் சம்பாதித்தாலும், குறுக்குவழியில் சம்பாதித்ததாகச் சிலர் குறை கூறலாம். சின்னச் சின்ன பகையும் மோதலும் ஏற்படும். கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது.
3. பழைய வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவை தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியம். வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படுங்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் கூடாது.

4. குரு பகவான் 6-ல் அமர்வதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் வாகனம் பழுதுபட்டு, பயணம் தடைப்படவும் வாய்ப்பு உண்டு.
5. குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பல வகையிலும் பணவரவு உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டு. பேச்சில் நிதானம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.
6. குரு பகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும்.
7. குரு பகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு வாங்குவது, கட்டுவது நல்லபடியே நிறைவேறும். அரைகுறையாக நின்றுபோன கட்டட பணிகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். தாய் வழிச் சொத்துகள் கிடைக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
8. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.
9. வியாபாரத்தில், அடுத்தவரை நம்பி அகலக் கால் வைக்க வேண்டாம். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். போட்டிகள் அதிகரிக்கும். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. புதிய துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப்படாதீர்கள்.

10. உத்தியோகத்தில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பதவி - சம்பள உயர்வு தேடி வரும். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களே! அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
11. நீங்கள், ஏதேனும் ஒரு வியாழக் கிழமை அன்று, குடும்பத்துடன் ஆலங்குடி திருத்தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு 24 தீபங்கள் ஏற்றிவைத்து வணங்குங்கள்.
அத்துடன் ஆபத்சகாயேஸ்வரரையும், ஏலவார் குழலி அம்பாளையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். கோயில் அன்னதானப் பணிக்கு இயன்ற உதவியை வழங்குங்கள், கிரக தோஷங்கள் விலகி, முன்னேற்றம் உண்டாகும்.