செய்திகள் :

தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள்: துரோகம், ஏமாற்றம் விலகும்; தொட்ட காரியம் துலங்கும்!

post image

தனுசு- குருப்பெயர்ச்சி பலன்கள்

1. இதுவரையிலும் 6-ம் இடத்தில் மறைந்து கிடந்த உங்களின் ராசிநாதனான குரு பகவான், இப்போது 7-ல் வந்து அமர்கிறார். ஆகவே, உங்களைச் சூழ்ந்திருந்த பகை, துரோகம், ஏமாற்றம் அனைத்தும் விலகும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். 

2. குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு இடையே மனக்கசப்புகள் விலகும். மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உங்களின் அறிவுரையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும். 

3. வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். அக்கம் பக்கத்தில் இருந்துவந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 

தனுசு

4. ராசியைக் குருபகவான் பார்ப்பதால் எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள்,  சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். 

5. உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கெளரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.

6. குரு பகவான் 11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வையைப் பெறுவதால், தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் மனத்தாங்கல் நீங்கும். 

7. ஒருசிலருக்குப் பொன்-பொருள் சேர்க்கை நிகழும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

8. வியாபாரத்தில் புதுப் பாய்ச்சல் காட்டுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.  லாபம் உண்டாகும். சிலருக்கு, ஷேர் மார்க்கெட் மூலம் பண வரவு உண்டாகும். வருடத்தின் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.  ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

9. உத்தியோகத்தில், உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு, அவருடன் நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த பதவி - சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி

10. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். கலைஞர்களே! நல்லதொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். 

11. நீங்கள் பழநி முருகனைச் சரணடைந்தால், வாழ்வில் சந்தோஷம் பெருகும். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று, குடும்பத்துடன் சென்று பழநிக்குச் சென்று தண்டாயுதபாணியை தரிசித்து வழிபட்டு வாருங்கள். அத்துடன், அங்கே அருள்புரியும் போகர் பெருமானையும் வணங்கி வாருங்கள்; குருவருளும் திருவருளும் ஒருங்கே கிடைக்கும்; சுபிட்சம் உண்டாகும்.

மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள்: நட்பில் கவனம்; புதிய வாய்ப்புகள் தேடிவரும் - முழுப் பலன்கள் இதோ!

கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. எதிலும் நிதானமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குருபகவான் இப்போது நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைக... மேலும் பார்க்க

கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள்: விரக்தியும் தாழ்வு மனப்பான்மையும் விலகும்; பதவிகள் தேடிவரும்!

கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. குரு பகவான் 5-ம் இடத்தில் அமரவுள்ளதால், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம் உண்டு. பொருளாதார நிலையில் முன்னே... மேலும் பார்க்க

மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள்: கௌரவப் பதவிகள் தேடி வரும்; கவனமாக இருக்கவேண்டிய விஷயம் எது?

மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. பொறுமையும் பொறுப்பான செயல்பாடுகளும் மிகுந்த உங்களுக்கு குரு பார்வையால் சாதக பலன்கள் உண்டாகும். அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், பலவிதத்திலும் ஆதாயம் உண்டாகு... மேலும் பார்க்க

Gurupeyarchi 2025 | குருப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை | துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்கள்

பாரதி ஸ்ரீதர் 12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சிபலன்களை கணித்துச் சொல்கிறார். கூடவே அவர்கள் சென்று வழிபடவேண்டிய குரு பரிகாரத்தலங்கள் குறித்தும் சொல்கிறார். மேலும் பார்க்க

விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள்: கவனம்; நிதானம்; ஈகோ வேண்டாம் - முழுப்பலன்கள் இதோ!

விருச்சிகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. குரு பகவான் ராசிக்கு 8-ல் வந்து அமர்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். இனம் காண இயலாதபடி இரு... மேலும் பார்க்க