மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று(செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, சனிக்கிழமை இரவு இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.
ஆனால், எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஸின்பதர் கெல்லர் பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த ஷாஹித் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!