செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம்

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. பொள்ளாச்சி சின்னப்பம்பட்டியில் பாலியலுக்காக பயன்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீடு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சொல்லியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.  பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

3 குற்ற பத்திரிகைகள்:

சிபிஐ தரப்பில் சுமார் 3 குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சார்பில்  50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நேரடி வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். இதற்காக காலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டு, கோவை நீதிமன்றத்துக்கு 8.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பூட்டிய அறையில் வாசித்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்ததை, வரவேற்கும் விதமாக, நீதிமன்ற வளாகத்தில் அனைந்திந்திய மாதர் சங்கம் கோஷமிட்டு வரவேற்றனர்.

`சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’ - கோரிக்கை

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், அருளானந்தம், மணிவண்ணன், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டதால், 8 பேரில் ஒருவர் கூட பிறழ் சாட்டசியாக மாறவில்லை. குறைந்தபட்ச தண்டனை என்றாலே 20 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்படும். இதில் பெண்கள் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

வயது, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு தண்டனை விபரம் வழங்கப்படவுள்ளது." என்றார்.

9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு.

1) திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை

2) சபரி ராஜன் - 4 ஆயுள் தண்டனை

3) சதிஷ் - 3 ஆயுள் தண்டனை

4) வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை

5) மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை

6) பாபு - 1 ஆயுள் தண்டனை

7) ஹெரோன் பால் - 3 ஆயுள் தண்டனை

8) அருளானந்தம் - 1 ஆயுள் தண்டனை

9) அருண்குமார் - 1 ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு! | Live

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்... மேலும் பார்க்க

ANI:``இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" - விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை 'அரசின் ஒரு பிரசாரகர்' என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது.இதற்கு ANI நிறுவனம்... மேலும் பார்க்க

`இப்போ டெல்லியில் தானே இருக்கீங்க?’ - தமிழ்நாட்டில் NEP-ஐ அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கிய... மேலும் பார்க்க

'செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே...' - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார்.அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியி... மேலும் பார்க்க

கரூர்: `எச்சில் இலையில் உருளும் நெரூர் மட சடங்குக்குத் தடை...' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சாமியாரின் சமாதியில், அவரது நினைவு நாளில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மனித நேயத்திற்கு எதிரானது ம... மேலும் பார்க்க

விவாகரத்து: பெண்ணுக்கு 'தங்க நகைகள்' திருப்பிக்கொடுக்கப்பட வேண்டுமா? - நீதிமன்ற உத்தரவு என்ன?

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் நகைகளும் பணமும் (சீதனம்) பெண்ணின் தனிப்பட்ட சொத்து என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.எர்ணாகுளம் மாவட்டம், கலமசேரியைச் சேர்ந்த பெ... மேலும் பார்க்க