இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
'செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே...' - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியிருந்தார்.

முகலாயர்களுக்கு சொந்தமான சொத்துகளை கிழக்கிந்திய கம்பெனி சேர்ந்தவர்கள் பிடித்து வைத்திருந்ததாகவும், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அவற்றை இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அதன்படி டெல்லியில் உள்ள செங்கோட்டை சட்ட விரோதமாக இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே உடனடியாக அதனை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இவ்வளவு நாள் சட்டவிரோதமாக செங்கோட்டையை ஆக்கிரமித்து இருந்ததற்காக இந்திய அரசாங்கம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா , "ஏன் டெல்லி செங்கோட்டையை மட்டும் கேட்கிறீர்கள். பதேபூர் சிக்கிரி கோட்டையையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே. என்ன மாதிரியான வழக்கு இதெல்லாம்" எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே இதே வழக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்திருந்தது.

இதற்கு எதிராகத்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தற்போது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றம் தாமதமாக வழக்கைத் தாக்கல் செய்ததால் தான் தனது மனுவை தள்ளுபடி செய்ததாகவும் எனவே உச்ச நீதிமன்றம் மெரிட் அடிப்படையில் தனது வழக்கை விசாரிக்க வேண்டும் என செங்கோட்டையை உரிமை கூறிய சுல்தானா பேகம், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.