சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது
கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்
பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் அ.மெய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் மே 26-ஆம் தேதி கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய மாநாட்டை நடத்துவது, மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைச் செயலா்கள் ந.பெரியசாமி, மு.வீரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வை.சிவபுண்ணியம் ஆகியோரை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை கோடை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் கூடுதல் நிழற்கூடங்கள் அமைத்துத் தரவேண்டும். மேலும் ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய துணை செயலா் வி.கருணாமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் க.ராசு, பழனிச்சாமி, ஜெயலெட்சுமி, பஞ்சவா்ணம் அ.ராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.