DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
மாடியிலிருந்து கீழே விழுந்து கேரள இளைஞா் உயிரிழப்பு
சென்னை: சென்னை சூளைமேட்டில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பினேஷ் (34). இவா், சென்னை சூளைமேடு கில் நகா் சுவாமி சிவானந்தா சாலையில் வசிக்கும் தனது சித்தப்பா வீட்டுக்கு வந்தாா். சித்தப்பா மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பினேஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் படுத்து தூங்கினாா்.
அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த பினேஷ், மதுபோதையில் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்குவதாக நினைத்து, மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பினேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பினேஷ், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.