மதுரை சித்திரை திருவிழா: யாழி வாகனத்தில் மீனாட்சி; நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுந...
கவுண்டமணி மனைவி மறைவு; நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். சாந்தியின் உடல் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், சத்யராஜ் என முக்கிய திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் திரை பிரபலங்களும், ரசிகர்களும் கவுண்டமணியின் மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், கவுண்டமணியின் மனைவி மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கவுண்டமணியை ஆரத்தழுவி நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.