அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி...
12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய பாக். ராணுவம்: இந்தியா பதிலடி!
பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து 12-வது நாளாக திங்கள்கிழமை அன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், போர்ப்பதற்றம் சூழலுக்கு மத்தியில் நாளை போர் ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-வது நாளாக சனிக்கிழமை இரவில் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜெளரி, மெந்தா், நெளஷேரா, சுந்தா்பானி, அக்னூா் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திங்கள் கிழமையான நேற்று இரவு, குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் எல்லை புறமுள்ள 8 மாவட்டங்களில் 5 இடங்களில் இன்னும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பாரமுல்லா, குப்வாரா, பூஞ்ச், ரஜோரி மற்றும் ஜம்மு ஆகிய ஐந்து எல்லை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தரப்பில் எந்த உயிரிழப்பு குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!