செய்திகள் :

சுந்தரி தொடர் நாயகிக்கு குழந்தை பிறந்தது!

post image

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அறியபட்டவர் நடிகை கேப்ரியல்லா.

தொடர்ந்து டிக் டாக்கில் விடியோவில் வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமான இவருக்கு, திரைத்துறையில் வாய்ப்புக் கிடைத்தது. நயன்தாராவின் ஐரா, காஞ்சனா - 3, கபாலி உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் கேப்ரியல்லா. சுந்தரி தொடரின் முதல் பாகத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக, நடிகை கேப்ரியல்லா தான் கருவுற்று இருப்பதாக தெரிவித்து அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவருடைய பதிவில், “மகளே, உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே.

சித்ரா அம்மா, மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, என் மீது அன்பைக் கொட்டி குடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள்.

கேப்ரியல்லா.

இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கேப்ரியல்லா குழந்தை பிறந்துள்ளதையொட்டி அவருக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

பென்ஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இ... மேலும் பார்க்க

ஸ்குவிட் கேம் - 3 டீசர்!

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசனின் டீசர் வெளியாகியுள்ளது.பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ... மேலும் பார்க்க

ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ படத்தைப் பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை... மேலும் பார்க்க

ஆர்யா சொன்னதால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சந்தானம்!

நடிகர் சந்தானம் தன் நண்பர் ஆர்யா குறித்து சுவாரஸ்யமாக பேசியது வைரலாகியுள்ளது.நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே 16 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்த... மேலும் பார்க்க

ஆத்தூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீர்த்த குட ஊர்வலம்

ஆத்தூரில் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா, தேர் திருவிழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.சேலம் மாவட்டம் ஆத்தூர் தாயுமானவர் தெருவில் பிரசித்தி பெற்ற தர்மராஜர் திருக்க... மேலும் பார்க்க

அடுத்தப்படம் இதுதான்: கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கல... மேலும் பார்க்க