செய்திகள் :

ஸ்குவிட் கேம் - 3 டீசர்!

post image

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசனின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேம் பாகம் 1 வெளியானது.

இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்.

அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. அண்மையில், வெளியான இந்த சீசனும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிக்க: ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!

ஸ்குவிட் கேம் - 3 இந்தாண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுவே இறுதி சீசன் எனவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்த நிலையில், இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். இறுதி சீசன் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தென்னிந்தியப் படங்களை காப்பி அடிக்கிறது பாலிவுட்: நவாசுதீன் சித்திக்

நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரைத்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகிதனது நடிப்புத்திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நவாசுதீன் சித்தி... மேலும் பார்க்க

அய்யனார் துணை தொடரில் சிங்கப் பெண்ணே நடிகை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நடிகை திவ்யா விஜயகுமார் இணைந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடரில் யாழினி என்ற பாத்திரத்திற்கு வலுசேர்க்க... மேலும் பார்க்க

மோகன்லாலின் தொடரும் டிரைலர்!

மோகன்லாலின் துடரும் படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது... மேலும் பார்க்க

9 மாதங்களில் நிறைவடையும் பிரபல தொடர்!

புன்னகைப் பூவே தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ... மேலும் பார்க்க

பென்ஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இ... மேலும் பார்க்க

ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ படத்தைப் பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை... மேலும் பார்க்க