செய்திகள் :

தென்னிந்தியப் படங்களை காப்பி அடிக்கிறது பாலிவுட்: நவாசுதீன் சித்திக்

post image

நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரைத்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நவாசுதீன் சித்திக்.

வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து அதில் நடிப்பிற்கு வேலையுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பார். ஹிந்தி திரையுலகில் பிரபலமான இவர் தமிழில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது, இவர் நடிப்பில் உருவான கோஸ்டா திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி 1990-ல் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தங்கக் கடத்தலை தடுக்க முயன்ற சுங்க அதிகாரியின் கதாபாத்திரத்தில் நவாசுதீன் நடித்திருக்கிறார்.

படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நவாசுதீன், “பாலிவுட் சினிமாவில் உண்மைத்தன்மை இல்லை. முக்கியமாக, ஹிந்தி திரைப்படங்களில் நல்ல கதைகளும் படைப்பாற்றலும் இல்லை. தற்போது, பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்களை காப்பி அடிக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான சூத்திரங்களைக் கொண்டு ஹிந்தியில் படங்களை எடுக்க முயற்சிக்கின்றனர். வெற்றிப் பெற்றால் அடுத்தடுத்த பாகங்களுக்குச் செல்கின்றனர்.

கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் நவாசுதீன் சித்திக்

மேலும், ஒரே மாதிரியான காட்சிகளையும் திரும்பத் திரும்ப திருடி எடுக்கின்றனர். திருடுபவர்களால் படைப்பாளியாக இருக்க முடியுமா? இதனால், படைப்புத் திறனுக்கான வேலையே இல்லாமல் ஆகிவிட்டது. இப்படியே இருந்தால் நல்ல படங்களைக் கொடுத்த அனுராக் காஷ்யப்பைப் போல பல நடிகர்களும் இயக்குநர்களும் பாலிவுட்டை விட்டு வெளியேறுவார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆர்யா சொன்னதால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சந்தானம்!

சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கப்போவது விஜய்யா? - அசினா | minority | TvkVijay | DMK | ADMK | Shorts

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?6819fa10070d8f0221060dbc/66d5a25983448bee6626e223/thumbnail-1-... மேலும் பார்க்க

தாயகப்போகும் லாவண்யா..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை லாவண்யா த்ரிப்பாதி கருவுற்று இருப்பதை நடிகர் வருண் தேஜ் அறிவித்துள்ளார்.தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிப்பாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள... மேலும் பார்க்க

‘கூலி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் ‘கூலி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’-ஐ பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நாள் ம... மேலும் பார்க்க

15 ஆண்டுகள் சாபத்தை உடைத்து சாம்பியனான ஹாரி கேன்! விராட் கோலிக்கும் நடக்குமா?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் 2010-இல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப்பில் சேர்ந்தார். அந்த அணியிலிருந்து லோன் மூலமாக பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். பெயர்ன் மியூனிக் அணியில் கடந்த 2023இல் இண... மேலும் பார்க்க