உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10...
தாயகப்போகும் லாவண்யா..! குவியும் வாழ்த்துகள்!
நடிகை லாவண்யா த்ரிப்பாதி கருவுற்று இருப்பதை நடிகர் வருண் தேஜ் அறிவித்துள்ளார்.
தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிப்பாதி.
தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள்ளார். 2017-இல் மிஸ்டர் படத்தில் நடித்தபோதே இருவருக்கு காதல் பூத்ததாக தகவல்கள் கசிந்தது.
பின்னர் இருவருக்கும் 2023 நவம்பரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தங்களக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதை இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த தம்பதிகளுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
வருண் தேஜ் தனது எக்ஸ் பதிவில் ”வாழ்க்கையின் முக்கியமான அழகான ரோல் விரைவில் வரவிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்தப் பதிவில் குழந்தையின் இரண்டு காலணிகளைப் பிடித்துள்ளது போல் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்கள்.
லாவண்யா த்ரிப்பாதி கடைசியாக “மிஸ் பர்பெக்ட்” எனும் இணையத் தொடரில் நடித்து இருந்தார். 2024ஆம் ஆண்டு வெளியான இதனை விஷ்வக் கண்டேராவ் இயக்கியிருந்தார்.
நடிகர் வருண் தேஜின் நடிப்பில் கடைசியாக மட்கா திரைப்படம் கடந்த 2024 நவம்பரில் வெளியானது.
Life’s most beautiful role yet -
— Varun Tej Konidela (@IAmVarunTej) May 6, 2025
Coming soon ♥️♥️♥️ pic.twitter.com/532M5e8muV