இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
பேங்க் ஆப் பரோடா 4வது காலாண்டு லாபம் 3% அதிகப்பு!
புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் நிகர லாபம், 2025ஆம் நிதியாண்டின், மார்ச் வரையான காலாண்டில், 3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,048 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.4,886 கோடியாக இருந்தது. இந்த காலாண்டில், வங்கியின் மொத்த வருமானம் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.33,775 கோடியாக இருந்தது.
வங்கியின் வட்டி வருமானம் முந்தைய நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.29,583 கோடியிலிருந்து ரூ.30,642 கோடியாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், நிகர வட்டி வருமானம் ரூ.11,020 கோடியாக குறைந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் இது ரூ.11,793 கோடியாக இருந்தது.
2024-25 நிதியாண்டில், வங்கியின் முந்தைய ஆண்டு லாபம் ரூ.17,789 கோடியிலிருந்து 10 சதவிகிதம் அதிகரித்து ரூ.19,581 கோடியாக இருந்தது. அதே வேளையில், வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,27,101 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,38,089 கோடியானது.
2024-25-ம் நிதியாண்டில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.8.35 ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக முடிவு!