செய்திகள் :

சென்செக்ஸ் 155.77 புள்ளிகளும் நிஃப்டி 81.55 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

post image

மும்பை: பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு நடுவில், முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் லாபத்தை முன்பதிவு செய்ததால், இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து முடிந்தன.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100.4 புள்ளிகள் குறைந்து 80,696.44 ஆக இருந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.15 புள்ளிகள் குறைந்து 24,421 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 155.77 புள்ளிகள் சரிந்து 80,641.07 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 81.55 புள்ளிகள் சரிந்து 24,379.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் டைட்டன், சன் பார்மா, எடர்னல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், எடர்னல், ஜியோ பைனான்சியல், ட்ரெண்ட், எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், எம் அண்ட் எம், ஹெச்யூஎல் நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.

வாகனம் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. பொதுத்துறை வங்கி குறியீடு கிட்டத்தட்ட 5 சதவிகிதமும், ரியாலிட்டி குறியீடு 3.5 சதவிகிதமும், பார்மா, நுகர்வோர் சாதனங்கள், ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் ஆகிய துறைகள் 1 முதல் 2.6 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ-யில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.

உள்நாட்டு மருந்து உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு சிப்லா பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

சிசிஎல் புராடக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் பங்குகள் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 56 சதவிகிதம் உயர்ந்ததால் அதன் பங்குகள் 15 சதவிகிதம் வரை உயர்ந்ததும், டிசிஎம் ஸ்ரீராம், 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 51 சதவிகிதம் உயர்ந்த போதிலும் அதன் பங்குகள் 2 சதவிகிதமும் சரிந்தும், பாம்பே டையிங் நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 82% சரிந்ததையடுத்து அதன் பங்குகள் 6 சதவிகிதம் சரிந்தும், இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 25% உயர்ந்த போதிலும் அதன் பங்குகள் 6 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சம்பல் பெர்டிலைசர்ஸ், சியட், மங்களூர் கெமிக்கல்ஸ், பார்தி ஏர்டெல், அனுபம் ரசாயன், காட்ஃப்ரே பிலிப் உள்ளிட்ட 60 பங்குகள் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

இதையும் படிக்க: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 4வது காலாண்டு லாபம் சரிவு!

பேங்க் ஆப் பரோடா 4வது காலாண்டு லாபம் 3% அதிகப்பு!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் நிகர லாபம், 2025ஆம் நிதியாண்டின், மார்ச் வரையான காலாண்டில், 3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,048 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக நிலைபெற்றது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்று வரும் புவிசார் அ... மேலும் பார்க்க

அதிகபட்ச பேட்டரி திறனுடன் வருகிறது ரியல்மீ ஜிடி!

ஸ்மார்ட்போன் உலகில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh பேட்டரி திறனுடன் ரியல்மீ ஜிடி உருவாகி வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மாட்ர்போன்கள் கூட இந்த அளவுக்கு பேட்டரி... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் கார்கள்

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்டில் ரூ.10 லட்சத்துக்குள் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மின்சார கார்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டாட்டா பஞ்ச் இவிTATA PUNCH EVஇந்தியாவில் மின்சார கார்கள் ... மேலும் பார்க்க

நிறைவான அம்சங்களுடன் ரூ.10,000-க்கு ஸ்மார்ட்போன்!

ரூ. 10 ஆயிரத்துக்கு கீழ் விலையை நிர்ணயித்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். லாவா நிறுவனத்தின் யுவா ஸ்டார் 2 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிம... மேலும் பார்க்க

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகும் நிலைய... மேலும் பார்க்க