நிறைவான அம்சங்களுடன் ரூ.10,000-க்கு ஸ்மார்ட்போன்!
ரூ. 10 ஆயிரத்துக்கு கீழ் விலையை நிர்ணயித்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம்.
லாவா நிறுவனத்தின் யுவா ஸ்டார் 2 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது இணைய வணிக தளங்கள் மற்றும் கடைகளிலும் கிடைக்கும் என லாவா தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லாவா நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஏற்ப அனைத்து அடிப்படையான அம்சங்களுடனும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் நிறைவான அம்சங்களுடன் ரூ. 10 ஆயிரத்துக்கு கீழ் யுவா ஸ்டார் 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது.
64GB நினைவகம், 4GB உள்நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் திறன்களைப் பொறுத்து விலை மாறுபடலாம். அதாவது அதிக நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் விலை.
கருப்பு மற்றும் இளம் மஞ்சள் என இரு நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணைய விற்பனைத் தளங்கள் உள்பட அனைத்து கடைகளிலும் கிடைக்கும் என லாவா அறிவித்துள்ளது.
விலை குறைவாக இருந்தாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் நிறைவாகவே உள்ளன. அதாவது, பெரிய தொடுதிரை, இரு பக்கங்களிலும் கேமரா, மூன்றாம் தரப்பு செயலிகள் பதிவிறக்கம் செய்யாத வகையில் பாதுகாப்பான மென்பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்ட்ராய்டு 14 கோ புராசஸருடன், 6.75 அங்குல திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைப் பட்டியலில் இந்த புராசஸரும், பெரிய திரையும் முன்பு வேறு எந்தவொரு நிறுவனங்களும் அளித்ததில்லை என லாவா கூறுகிறது.
பிக்பக்கம் 13MP கேமராவும் முன்பக்கம் 5MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. பல முன்னணி பிராண்டுகள் வழங்குவதைப்போல 5,000mAh பேட்டரி திறனும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் குறைந்த விலையில் பல அடிப்படை அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு லாவா யுவா ஸ்டார் 2 சிறந்த தேர்வாக அமையும் என லாவா குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?