ரெட்ரோ வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே முதல் நாளில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த (ரூ. 17.75 கோடி) படம் என்கிற பெயரைப் பெற்றது ரெட்ரோ.
இந்த நிலையில், இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ. 104 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வார இறுதிக்குள் ரூ. 150 கோடி வரை செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கங்குவாவின் தோல்வியைத் தொடர்ந்து சூர்யா இப்படத்தில் வெற்றி பெற்றிருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: தென்னிந்தியப் படங்களை காப்பி அடிக்கிறது பாலிவுட்: நவாசுதீன் சித்திக்