உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10...
திருச்சி தாயுமான சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி மாட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தென் கைலாயம் எனப் போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் சித்திரைத் திருவிழா கடந்த 1 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று மலைக்கோட்டை நூறு கால் மண்டபத்தில் தாயுமான சுவாமி மட்டுவார் குழலி அம்மையார் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு யாகங்கள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தைத் தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்
இதில் தருமபுரம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.