பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
Mudumalai: 'அண்ணன பாத்தியா...' - குழந்தையாக மாறிய கும்கி யானை; கொட்டும் மழையில் குதூகலம்!
ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த வளர்ப்பு யானை முகாம்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்.
நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் இந்த முகாமில் தாயைப் பிரிந்த யானை குட்டிகள் மற்றும் பிராப்ளமேட்டிக் எலிஃபென்ட் எனப்படும் மனித எதிர்கொள்ளல்களை விளைவிக்கும் யானைகளைச் சிறைபிடித்துப் பராமரித்து வருகின்றனர்.

திடகாத்திரமான யானைகளுக்குக் கும்பி பயிற்சி அளித்து எதிர்கொள்ளல்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
பழங்குடி பாகன்கள் மூலம் பராமரிக்கப்படும் இந்த யானைகளுக்குக் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு வழங்குவதைக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதனைக் காண தெப்பக்காடு முகாமிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் தெப்பக்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்குவதைப் பார்க்க ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.

திடீரென கனமழை செய்திருக்கிறது. அங்கிருந்த சிறுவர் சிறுமியர் யானைகளைப் பார்த்த கொண்டாட்டத்தில் பாடல்களைப் பாட அதனைக் கண்ட ஜம்பு என்கிற கும்கி யானையும் பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தபடி நடனமாடிக் குதூகலித்திருக்கிறது.
குழந்தைகள் பாடும் 'அண்ணன பாத்தியா' பாடலுக்குக் குழந்தையாக மாறி மழையைக் கொண்டாடி நடனமாடும் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs