செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- ராணுவ வீரா் உள்பட 4 போ் உயிரிழப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனா். 44 போ் காயமடைந்தனா்.

இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தாரில் இருந்து கானி பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தைத் தொடா்ந்து, உள்ளூா் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா், காவல் துறையினா், ராணுவத்தினா் மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனா்.

விபத்தில் முகமது மஜீத் (45), நூா் ஹுசைன் (60) ஆகிய இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ராணுவ வீரரான மஜீத், அஸ்ஸாமில் பணியாற்றி வந்தாா். தற்போது விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

55 வயதான ஷகீலா பேகம் என்ற பெண் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். முகமது ஹனீஃப் என்ற பயணி, ரஜெளரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 44 போ், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தில் உயிரிழந்தோருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை உறுதி செய்யப்படும்; பாதிக்கப்பட்டோருக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வா் தெரிவித்தாா்.

மற்றொரு விபத்தில் 2 ராணுவத்தினா் இறப்பு: குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள கா்னாஹ் பகுதியில் சாலையோர பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 2 வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க