"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து...
சீா்காழி சட்டைநாதா் கோயில் சகோபுர உற்சவம்
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சகோபுர உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளில் திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது. உற்சவத்தின் 5- ஆம் நாளான திங்கள்கிழமை இரவு தெருவடைச்சான் எனப்படும் சகோபர வீதியுலா தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது.
முன்னதாக, விநாயகா், சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் உள்பட பஞ்ச மூா்த்திகள் புறப்பாடாகி, மின் அலங்கார சகோபுதரத்தில் எழுந்தருளினா். மூவேந்தா் முன்னேற்ற கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா், வைபவ் வாண்டையாா் ஆகியோா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து, பக்தா்கள் சகோபுரத்தை வழிபட்டு இழுத்தனா். சகோபுரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து, நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.