சாம்பியன்ஸ் லீக்: ஆர்செனலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வானது பிஎஸ்ஜி!
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!
சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியையும், டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ. 2.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாநகரின் மீன் விற்பனையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதால், சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதி ஆகியவற்றின்கீழ், 82 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கட்டடமானது, புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு, மீன் கழிவுநீரினை பயோ டைஜிஸ்ட்க்கு கொண்டு செல்லும் தனி வடிகால் மற்றும் வாகன நிறுத்தம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், சென்னை மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உள்பட அரசு அலுவலர்கள், மீனவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!