சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 88.12% தேர்ச்சி!
சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 88.12 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 35 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 5,387 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 4,747 பேர் (88.12%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 87.13 ஆகும்.
நுங்கம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் 54 மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.