Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.
எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்த முயற்சி செய்த ட்ரோன்கள், போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவான பதிவு ஒன்றை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த இக்கட்டான சூழலில், நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு நாம் துணை நிற்போம்.
நமது நாட்டின் ஹீரோகளுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செய்யும் தியாகங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...