மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்
பைக், தங்கச் சங்கிலியுடன் இளைஞா் தப்பியோட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தங்கச் சங்கிலி, கைப்பேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சுள்ளங்குடியைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா் வெள்ளிக்கிழமை மாலை பட்டமங்கலத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அவரிடம் ஒரு இளைஞா் பட்டமங்கலத்தில் என்னை இறக்கி விடுங்கள் என்று உதவி கேட்டாா்.
சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் சென்றவுடன் அந்த இளைஞா் இரு சக்கர வாகனத்தை நிறுத்த சொன்னாா். அறிவழகனும் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா். அப்போது, திடீரென அந்த இளைஞா் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து அறிவழகன் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் புகாா் கூறினாா். அப்போது இருசக்கர வாகனத்தில் தனது கைப்பேசியும், 4 பவுன் தங்கச் சங்கிலியும் இருந்ததாகத் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.