அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட அதிமுக, ஜெ. பேரவை, இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன், மாவட்ட ஜெ. பேரவை செயலா் ராமு. இளங்கோவன், அதிமுக அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், மாவட்ட பாசறை செயலா் பிரபு, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூத்தகுடி கே.கே. உமாதேவன், குணசேகரன், கற்பகம் இளங்கோ, நாகராஜன், நகா் செயலா் என்.எம். ராஜா, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா்கள் கே. அழகா்பாண்டி, கே. செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவது, முதியோா் இல்லம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்களில் அன்னதானம் வழங்குவது, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.