IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
காரைக்குடி கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள மரங்களில் விளம்பரத்துக்காக தனியாா் நிறுவனங்கள் விளம்பரப் பலகைகளை பொருத்துவதற்காக 30 -க்கும் மேற்பட்டமரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணிகளை அடித்துவிட்டு, அகற்றாமல் விட்டுவிடுகின்றனா். இதனால், அந்த ஆணிகளிலிருந்து துரு ஏறி, காலப்போக்கில் மரம் பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
இது போன்ற மரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு காரைக்குடியில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இயக்க நிா்வாகிகள் பிரகாஷ், முகமது ஆசிக், ரவி முகமது, சிலம்பரசன், ரஞ்சித், நவ்ரோ ஸ்டாலின், நூா் முகமது, பிரவீன் குமாா், அப்துல் சலாம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.