செய்திகள் :

Trump: "நான் எச்சரித்ததால்தான்..." - இந்தியா-பாக். அணு ஆயுத போரைத் தான்தான் தடுத்ததாக ட்ரம்ப் பேச்சு

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசி வந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன.

இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று கூறியிருந்தார்.

மேலும், நேர்காணல் ஒன்றில், "இரு நாடுகளுடனும் நல்ல நட்பு இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

பழிக்குப் பழி தீர்க்கப்பட்டது. இனி இருவரும் அனைத்தையும் நிறுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

தற்போது, "பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால்தான், இரு நாடுகளும் உடனே சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன.

இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகமாக வணிகம் செய்ய உள்ளது. அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்பு இருந்த நிலையை அதைத் தடுத்து நிறுத்திருக்கிறது அமெரிக்கா" என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில... மேலும் பார்க்க

Modi: "'ஆபரேஷன் சிந்தூர்' என்பது வெறும் பெயரல்ல. அது..!" - மோடி உரை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: ``என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்" - இளையராஜா அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், இசையமைப்ப... மேலும் பார்க்க

"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாகப் பாகிஸ்தான் கூறிய... மேலும் பார்க்க

`பாகிஸ்தான் கபட வேடம்; இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு' -வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந... மேலும் பார்க்க

India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Album

புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் ந... மேலும் பார்க்க