செய்திகள் :

`பாகிஸ்தான் கபட வேடம்; இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு' -வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

post image

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.

இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டது எனக் கூறியது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி ராணுவ நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய நகரங்களையும், உள்கட்டமைப்பையும் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக தகர்த்தது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் பொறுப்புணர்வுடன் முறியடித்தது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மறுப்பது அவர்களது கபட வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காஷ்மீர்

வழிபாட்டு தலங்களை தாக்க முயற்சி

இந்தியாவில் வழிபாட்டு தலங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஜம்மு- காஷ்மீரில் பூஞ்ச் பள்ளியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கட்டடம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பள்ளி மூடப்பட்டிருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பூஞ்ச் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி தேவாலயத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோர் காயமடைந்தனர். ஆனால் வழிபாட்டு தலங்களைத் தாக்கவில்லை என பாகிஸ்தான் பொய்ப் பிரசாரம் செய்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு

ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அமெரிக்காவுடன் பேசி வருகிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன.

கர்தார்பூர் சாஹிப் வழித்தடம்

கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

எல்லையில் பதற்றம் நிலவுவதால் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் தனது தவறுக்கு பொறுப்பு ஏற்காமல், அமிருதசரஸ் போன்ற நகரங்களை இந்தியாவே குறிவைத்து தாக்குவதாக நம் மீது குற்றம்சாட்டுகிறது. இதுபோன்ற பொய்களை பரப்புவதில் பாகிஸ்தான் கைதேர்ந்த நாடு என்பதற்கு வரலாறே சான்று. பாகிஸ்தானில் உள்ள நான்கமா சாஹிப் குருத்வாராவை இந்தியா தாக்க முயற்சிப்பதாக கூறுவது அப்பட்டமான பொய். மத மோதலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற கருத்துகளை பாகிஸ்தான் பரப்புகிறது" என மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துப் பேசியிருக்கிறார்.

India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Album

புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் ந... மேலும் பார்க்க

Operation Sindoor: `என் மகள நினைச்சு பெருமைப்படுறேன்..!' - நெகிழும் சோபியா குரேஷிவின் தந்தை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குத... மேலும் பார்க்க

12th Result: "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது; தேர்வுக்கான மதிப்பீடு" - அமைச்சர் அன்பில் மகேஸ்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக... மேலும் பார்க்க

"2 மதங்களைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள்; பெண்ணினத்திற்கே பெருமை" - தமிழிசை செளந்தரராஜன்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

பஹல்காம் பதிலடி: 15 நாள்களில் `ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தை இந்தியா எப்படி நடத்தியது? - முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது எதிர்தாக்குதலான "ஆபரேஷன் சிந்தூரை" நடத்தியுள்ளது.இந்த ”ஆபரேஷன் சிந்தூர்” நடத்த கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கமும் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

சிவகாசி: பொது சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு; கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

சிவகாசி மாநகராட்சியின் திருத்தங்கல் பகுதி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் துரைப்பாண்டி. இவருடைய வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை அதிகாரிகள் இடிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்... மேலும் பார்க்க