பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
Operation Sindoor: `என் மகள நினைச்சு பெருமைப்படுறேன்..!' - நெகிழும் சோபியா குரேஷிவின் தந்தை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளைக் கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங், என இரண்டு பெண் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இவர்கள் இருவரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு தலைமை வகித்திருக்கிறார்கள். இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷி குறித்து அவரது அம்மாவும், அப்பாவும் பேட்டி அளித்திருக்கின்றனர்.
பெருமையாக இருக்கிறது!
சோபியா குரேஷி குறித்து பேசிய அவருடைய அம்மா, “ நாட்டிற்காக எங்களது மகள் செய்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த செயல், மற்றவர்களும் தங்களது மகள்களை நாட்டிற்கு சேவை ஆற்ற வைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மகள் நாட்டிற்காக இதைச் செய்திருக்கிறார் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

சிறுவயதில் இருந்தேன் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் சோபியா குரேஷியின் ஆசை” என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சோபியா குரேஷி குறித்து பேசிய அவரது அப்பா, “நாங்கள் நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் இருக்கிறோம். என் மகளை நினைத்து பெருமைக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...