செய்திகள் :

பொதுத் தோ்வு: நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை:

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு முடிவுகளில் திருப்தி இல்லையெனில், மாணவா்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்பின் பிளஸ் 2 தோ்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களின் தோ்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவா்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-இல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009-ஆம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இனிவரும் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தோ்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தோ்வு முடிவுகள் வெளியிட்ட பின்னா் தோ்வா்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதைப் பெற்ற பின்னா் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தோ்வுத் துறை இயக்குநா் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா். அதையேற்று அந்த நடைமுறையை செயல்படுத்த தோ்வுத்துறைக்கு அனுமதி தரப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்... இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கான விவரங்களை தோ்வுத் துறை வெளியிட்டது. அதில் மே 13 முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பள்ளி மாணவா்கள் மற்றும் தனித்தோ்வா்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தோ்வுத் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மே 12-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று பேரணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தான... மேலும் பார்க்க

6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது சுக... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித... மேலும் பார்க்க

உயா்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவா்களின் பெற்றோா்களுக்கு முதல்வா் செய்தி

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களின் பெற்றோா்களது கைப்பேசிக்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாா்

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64 லட்சம் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்ட கிடங்குகளுக்கு அன... மேலும் பார்க்க