பாகிஸ்தானில் நிலநடுக்கம்...!
பாகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் குவேட்டா நகரின் அருகில் இன்று (மே 10) அதிகாலை 1.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 4.0, On: 10/05/2025 01:44:17 IST, Lat: 29.67 N, Long: 66.10 E, Depth: 10 Km, Location: Pakistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) May 9, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/jVl5Y73VF9
இந்த நிலநடுக்கமானது நிலபரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, இதுபோன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள் நிலபரப்புக்கு மிக அருகில் ஏற்படுவதினால், அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க:’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!