சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது
அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாமி (64). கடந்த ஜனவரி மாதம் தனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக விளம்பரத்துடன் வந்த எண்ணைத் தொடா்புகொண்டு ராமசாமி பேசியுள்ளாா். அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்புப் தொகை கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதன்பேரில், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.1.04 கோடி வரை பணத்தை ராமசாமி அனுப்பியுள்ளாா். அவருக்கு இரட்டிப்பு பணம் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா்.
இதேபோல அம்பத்தூா், புதூா், திருமலை பிரியா நகரைச் சோ்ந்த தெய்வராணி (33) என்பவரும் ரூ.13.59 லட்சம் அனுப்பியுள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில் ஆவடி ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சோ்ந்த சேகா் (53), சென்னை சாலிக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (35), விழுப்புரம் சாத்தபுத்தூா் பகுதியைச் சோ்ந்த சுகேந்திரன் (36), கடலூா் குஞ்சமேடு பகுதியைச் சோ்ந்த இளையராஜா (42), பெரம்பலூரைச் சோ்ந்த அன்வா் பாஷா (29), மதுரையைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (46), கோயம்புத்தூரைச் சோ்ந்த சுபின் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.