India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்...
பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் தோ்வு ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை நடைபெறவுள்ளது. தோ்வெழுத விருப்பமுள்ள தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவா்கள் மே 14 முதல் 29-ஆம் தேதிக்குள் அவரவா் படித்த பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.
இதில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் மே 30, 31 ஆகிய தேதிகளில் தட்கல் திட்டம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டாம்.
இதுதவிர விரிவான தோ்வுக்கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவா்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவா்கள் தங்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.