`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோம...
'நேற்று தான் பார்த்தேன்...' பாக். தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி - உமர் அப்துல்லா வருத்தம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "ரஜோரியிலிருந்து ஒரு துயரச் செய்தி. ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தில் அர்ப்பணிப்புள்ள ஒரு அதிகாரியை நாங்கள் இழந்திருக்கிறோம்.

நேற்று தான், அந்த மாவட்டத்தைச் சுற்றிப் பார்க்க துணை முதலமைச்சருடன் சென்றிருந்தார். மேலும், நான் தலைமை தாங்கிய ஒரு ஆன்லைன் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்றிருந்தார்.
இன்று, பாகிஸ்தான் ரஜோரியை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவருடைய வீடு தாக்கப்பட்டுள்ளது. இதில் எங்களது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார்.
இந்தப் பயங்கரமான உயிரிழப்பு குறித்த எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Devastating news from Rajouri. We have lost a dedicated officer of the J&K Administration Services. Just yesterday he was accompanying the Deputy CM around the district & attended the online meeting I chaired. Today the residence of the officer was hit by Pak shelling as they…
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025