ராணுவத்திற்கு உதவ சண்டீகரில் குவிந்த தன்னார்வலர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பலியாதன் விளைய்வாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. இருதரப்பினரும் நாள்தோறும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வரும் வேளையில் சண்டீகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் நேற்றிரவு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் நாளை (அதாவது மே 10) காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம்” என்றும் பதிவிட்டிருந்தார்.
அதன்படி, காலையிலேயே குவிந்த இளைஞர் தன்னார்வலர் படையினர், “பாகிஸ்தான் அழிய வேண்டும்.. இந்திய ராணுவத்துக்கு உதவத் தயார்” எனக் கோஷமிட்டனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி