India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவ...
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - தில்லி போட்டி மீண்டும் தொடங்குமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஹிமாசலில் மே.8ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் -தில்லி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 122/1 ரன்கள் குவித்திருந்தது.
இந்தப் போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் 50 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் ஐயர் பூஜ்ஜியத்துடனும் களத்தில் இருந்தார்கள்.
இந்தப் போட்டி கைவிடப்பட்டாலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை ஐபிஎல் நிர்வாகம் வழங்கவில்லை. அதனால், இந்தப் போட்டி மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டி 10.1ஆவது ஓவரில் இருந்து மீண்டும் தொடங்குமெனக் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஒருவேளை இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியை வழங்கினால் தில்லிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்.