போரை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் சம்மதம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.
ராணுவத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு!
அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளின் அறிவார்ந்த செயலைப் பாராட்டுகிறேன் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.