பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு
போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம். அமைதி நிலைத்திருக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர்.
இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.
ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்
ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.
அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.