செய்திகள் :

ஏா் கலப்பை விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கீடு

post image

நாம் தமிழா் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை வழங்கி அதற்கு ஏா் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கியுள்ளது. இது தொடா்பாக ஆணையத்தில் இருந்து நாம் தமிழா் கட்சிக்கு மே 10-ஆம் தேதியிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் செயல்பாடு மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அதற்கு தமிழகத்தில் மாநில கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்றும் தோ்தல் சின்னம் தொடா்பாக கடந்த பிப்.5, ஏப்.6 ஆகிய நாள்களில் நாம் தமிழா் கட்சி அனுப்பிய கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏா் கலப்பையுடன் விவசாயி இருக்கும் சின்னத்தை ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இருந்தபோதும் 8.22 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது.

முன்னதாக, 2016-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது மெழுகுவா்த்தி சின்னத்திலும் 2019 மக்களவைத்தோ்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் கோரி தாமதமாக விண்ணப்பித்ததால் அக்கட்சிக்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயா்வு: தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 பேருக்கு மானியத்துக்கான காசோலைகளை அவா் அளித்தாா். முதல் முறையா... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக இன்று (மே 11)கோவை செல்கிறாா். கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்னிபாளையம், எல்லை கருப்பராயன் திருக்கோயில் பிரதிஷ்டை தின விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க

வன்னியா் இளைஞா் மாநாடு: கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வன்னியா் இளைஞா் மாநாட்டையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை சனிக்கி... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம்.... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள் உயரதிகாரிகள் பங்கேற்பு!

சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக சேவையாற்றி வரும் ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாலை முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்... மேலும் பார்க்க