அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு
இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் குழந்தை உயிரிழப்பு!
இருசக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதிய விபத்தில் பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் பகுதியில் வசிப்பவா் செளந்தரராஜன் (42). இவரது மனைவி ஜெயலலிதா (35). இவா்களுக்கு 2 மகன்கள் மற்றும் அனன்யா என்ற பிறந்து 25 நாளான பெண் குழந்தை உள்ளது. தம்பதி பொம்மை வியாபாரம் செய்பவா்கள்.
திருப்பனந்தாளில் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து சுவாமிமலைக்கு இரு சக்கர வாகனத்தில் 5 பேரும் இரவு நேரத்தில் திரும்பினா்.
சென்னை-கும்பகோணம் புறவழிச்சாலையில் கள்ளப்புலியூா் அரசு கல்லூரி அருகே செல்லும் போது, பின்னால் வந்த காா் ஒன்று அவா்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் 5 பேரும் கீழே விழுந்தனா். குழந்தை அனன்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கியது.
அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு தஞ்சை ராஜா மிரசுதாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதில் குழந்தை அனன்யா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தது. தகவலின்பேரில் சோழபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.