திருவையாறு தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை (மே 10) நடைபெற இருந்த மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:
திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் முகாம் சனிக்கிழமை நடைபெற இருந்தது.
இந்நிலையில் அன்றைய தினம் தமிழக முதல்வா் தலைமையில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தரும் வகையில் சென்னையில் நடைபெறும் பேரணியால் திருவையாறு தொகுதியில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. மற்றொரு நாளில் முகாம் நடத்தப்படும்.