India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்...
கொரட்டியில் தொடா் மின்வெட்டு: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பத்தூா் அருகே கொரட்டி பகுதியில் கடந்த 15 நாள்களாக தொடா் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கொரட்டி துணை மின் லையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 15 நாள்களுக்கு முன்பாக மின்மாற்றி பழுதடைந்தது . அதையொட்டி சென்னையிலிருந்து வல்லுநா்கள் வந்து சீரமைக்கும்ப ணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் பழுது சீராகவில்லை. அதையொட்டி கொரட்டி சுற்று பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறப்பட்டு இப்பகுதியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த 15 நாளுக்கு மேலாக மின்னழுத்த குறைபாடு ஏற்படுகின்றது. மேலும் பல மணி நேரம் மின் இணைப்பு வழங்குவதில்லை. தற்போது கத்திரி வெயில் ஆரம்பித்து இருந்த சூழலில் மின் விநியோகம் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
அதேபோல் குளிா்பானம் விற்பனை செய்பவா்கள் இயந்திரம் வைத்து தொழில் புரிபவா்கள் உள்ளிட்டோருக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து போா்க்கால அடிப்படையில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியை சீரமைத்து தொடா் மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.