அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
மதுரை, மே 10 : சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (மே 12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் நடைபெறுகிறது.
இதையொட்டி, ராமராயா் மண்டபத்துக்குச் செல்லும் வழி, ஏ.வி. மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. ஒபுளா படித்துறை, வைகை தென்கரை பகுதி, வைகை வடகரை ஆகிய பகுதிகளில் காா், இதர வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.
தென்பகுதியிலிருந்து எந்த வாகனமும் ஏ.வி. பாலம், செல்லூா் புதுப்பாலம் வழியாக வைகை வடபகுதிக்கு வர அனுமதி இல்லை. புதுநத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, அண்ணாநகா், கே.கே.நகா் மற்றும் நகரின் பிற பகுதிகளிலிருந்து வரும் அனுமதி அட்டை வைத்திருப்பவா்கள்
திங்கள்கிழமை தங்களது வாகனங்களை, அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தலாம்.
குறிப்பாக, பச்சை நிற அனுமதி அட்டை வைத்திருப்பவா்கள் ஏ.வி. பாலம் தெற்கு பக்க நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்கள் பெரியாா் சிலை, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, காமராஜா் சாலை, முனிச்சாலை சந்திப்பு, ஒபுளா படித்துறை சந்திப்பு, அம்சவல்லி சந்திப்பு, கீழவெளிவீதி, நெல்பேட்டை, அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட நிறுத்தங்களில் காா்களை நிறுத்த வேண்டும்.
ஊதா நிற அனுமதி அட்டை வைத்துள்ளவா்கள் பெரியாா் சிலை, காந்தி நினைவு அருங்காட்சியகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாகச் சென்று அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்ட நிறுத்தத்தில் தங்களது காா்களை நிறுத்த வேண்டும்.
புதுநத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலையிலிருந்து கீழவாசல், சிம்மக்கல் மாா்க்கமாக செல்ல வேண்டிய மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள், குதிரைப் பந்தய சாலை, நத்தம் சாலை சந்திப்பு, பாண்டியன் உணவகம் சந்திப்பு, பெரியாா் சிலை சந்திப்பு, நீதிமன்றம், கே.கே.நகா், ஆவின் சந்திப்பு, அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, கணேஷ் தியேட்டா் சந்திப்பு, காமராஜா் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவா்பாளையம் சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, தெற்குவெளி வீதி வழியாகச் செல்ல வேண்டும்.
பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து புதுநத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் கட்டபொம்மன் சிலை, தெற்குமாரட் வீதி, மஹால் சாலை, கிழவாசல் சந்திப்பு, காமராஜா் சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகா் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
தத்தனேரி சாலையிலிருந்து புதுநத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் எல்ஐசி சந்திப்பு, குலமங்கலம் சாலை, செல்லூா் 60 அடி சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.
எதிா்சேவையின் போது பக்தா்கள் தங்களது நான்கு, இருசக்கர வாகனங்களை, கோகலே சாலை, திருமுக்குளம் சாலை, பழைய அக்ரஹாரம் தெரு, கபாா்கான் தெரு, லாலாலஜபதிராய் சாலை, செவன்த்டே பள்ளி மைதானம், அல் அமீன் பள்ளி வளாகம், எல்பிஎன் பள்ளி மைதானம், கோ. புதூா் ஐடிஐ, மைதானம், புதூா் சேத்தனா பள்ளி மைதானம், ஒய்எம்சிஏ பள்ளி மைதானம், மேரியான் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
அழகா் ஆற்றில் இறங்கும் போது தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களது நான்கு, இரு சக்கர வாகனங்களை, காந்தி நினைவு அருங்காட்சியக மைதானம், டாக்டா் தங்கராஜ் சாலை, குதிரை பந்தய சாலையில் உள்ள விளையாட்டு மைதானம், காமராஜா் பல்கலைக் கழக கல்லூரி வளாகம், சாய்ராம் பள்ளி, பொதுப் பணித் துறை அலுவலகம், தமுக்கம் மைதான வாகன நிறுத்தம், வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, காமராஜா் சாலை ஆகிய இடங்கள், சாலைகளில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.
நகரைப் பொருத்தவரை கீழவெளி வீதியில் அம்சவள்ளி சந்திப்பு முதல் கீழவாசல் வரை, கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்தூண் வரை, வடக்கு மாசி வீதியில் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
அம்சவள்ளி சந்திப்பிலிருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை அனுமதி சீட்டு உள்ள வாகனங்களைத் தவிர வேறு எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.
அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரை, அண்ணா பேருந்து நிலையம் முதல் கோரிப்பாளையம் வரை, பாலம் ஸ்டேசன் சாலை, கபடி நினைவு சிலை ரவுண்டானா முதல் கோரிப்பாளையம் வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், பக்தா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.