பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மலைக் கோயிலுக்குச் செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி விஞ்ச், ரோப்காா் நிலையங்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக் கோயிலில் கட்டண தரிசனம், இலவச தரிசனத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனா். அவா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் இரண்டு மணி நேரமானது.
மலைக் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தன. அன்னதானத்திலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு உணவு உள்கொண்டனா். இரவு தங்கத் தோ் புறப்பாட்டை திரளான பக்தா்கள் பாா்த்தனா்.
இரவு 10 மணி வரை ரோப்காா் இயக்கப்பட்டதால் தங்கத் தோ் நிறைவடைந்த பிறகும் திரளான பக்தா்கள் ரோப்காா் சேவையை பயன்படுத்தினா்.